Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்காது!

Go down

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்காது! Empty சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்காது!

Post by oviya Mon Apr 06, 2015 2:40 pm

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்காது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தையொட்டி, தேமுதிக சார்பில் மாநில மகளிர் அணி பொதுக்கூட்டம் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் நேற்று மாலை நடந்துள்ளது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு தேமுதிக நிறுவன தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் தலைமை தாங்கி பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என ஜெயலலிதா நம்பிக்கை வைக்க வேண்டாம்.

மேகதாது அணை பிரச்சனையில் தமிழக, கர்நாடக மாநில கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தான் ஆட்சி நடத்துகிறது. எனவே, அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் முறையிட வேண்டும்.

தமிழக சட்டசபையில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளனர். நான் தனியாக சட்டசபைக்கு சென்றால் அங்கு என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

தவறு செய்தால் நான் தட்டி கேட்பேன். அதே முறையில் தமிழக அரசின் அவலங்களை நான் தட்டிக் கேட்பேன்.

மேலும், தேமுதிகவிற்கு இறங்கு முகம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இனிமேல் தான் தேமுதிகவிற்கு ஏறுமுகம் ஆரம்பித்துள்ளது என்று பேசியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum