Top posting users this month
No user |
வீட்டுக்குள் 24 அடி பள்ளம் தோண்டி நூதன பூஜை: அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்
Page 1 of 1

வேலூர் அருகே ஒரு வீட்டுக்குள் 24 அடி பள்ளம் தோண்டி பூஜை நடத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
வேலூர் அருகே அரியூரில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ராமலிங்கம் என்பவர் சித்தேரி ரோடு திருவள்ளுவர் நகரில் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு அரசு கட்டிக்கொடுத்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
பின்னர் மனைவி இறந்தபின் வீட்டை வாடகைக்கு விட்டு, சேலத்தில் உள்ள தனது மகன் மற்றும் மகளுடன் தற்போது வசித்து வருகிறார்.
இந்நிலையில், 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள இவரது பேரன் அசோக்குமார் (24), அரியூரில் உள்ள வீட்டுக்கு சென்று வாடகை வாங்கி வருதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த மாதம் 25ம் திகதி, புதிதாக ரமேஷ் என்பவர் அந்த வீட்டுக்கு வாடகைக்கு வருவதற்காக முன்பணம் கொடுத்துள்ளார்.
ஆனால் அசோக்குமார் வீட்டின் சாவியை அவரிடம் தராமல் காலம் தாழ்த்தி உள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு அந்த வீட்டிற்கு சென்ற ரமேஷ் வீட்டுக்குள் மலைபோல மண் குவிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து பொலிசாருக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறை நடுவே சுமார் 5 அடி அகலத்தில், 24 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, மற்றொரு அறையில் மண் குவிக்கப்பட்டு இருந்துள்ளது.
மேலும், ஒரு மூலையில் தேங்காய், மஞ்சள், குங்குமம், பூ, எலுமிச்சை போன்ற பொருட்கள் வைத்து பூஜை செய்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
பின்னர் நடந்த விசாரணையில், அந்த வீட்டின் படுக்கை அறையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. நுழைவு தேர்வு எழுதியதற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் இருந்துள்ளன.
அந்த சான்றிதழ்களில் வேலூர், சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களின் முகவரி இருந்துள்ளது.
தற்போது தலைமறைவான அசோக்குமார் மற்றும் அவனது கூட்டாளிகளை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum