Top posting users this month
No user |
Similar topics
ஊழல்வாதிகளை பாதுகாப்புக்கும் அரசாங்க நபரை நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்: ஹெல உறுமய
Page 1 of 1

ஊழல், மோசடியாளர்களை சட்டத்திற்கு முன்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அரசாங்கத்தில் இருந்து தடையேற்படுத்தும் நபர் யார் என்பதை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாட்டுக்கு தெரியப்படுத்த போவதாக ஜாதிக ஹெல உறுமய தேசிய அமைப்பாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த காலத்தில் எவராலும் மறைந்திருந்து எதனையும் செய்ய முடியாது. சகல தகவல்களும் வெளியில் வரும். இதனால், கண்ணாடி மாளிகைக்குள் இருந்து ஆடைகளை அவிழ்க்க வேண்டாம் எனவும் வர்ணசிங்க கூறியுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு என்ன நடந்தது. ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியாதபடி அவமான சம்பவம் ஒன்று இந்த அரசாங்கத்தில் நடந்தது.
இதற்கு யார் பொறுப்புக் கூறவேண்டும்? மைத்திரிபால சிறிசேனவா? இல்லை, ரணில் விக்ரமசிங்கவே இதற்கு பொறுப்புக் கூறவேண்டும்.
மத்திய வங்கியில் பாரிய நிதி குற்றம் நடந்துள்ளது.அந்த குற்றத்திற்கான பொறுப்பை யார் ஏற்பது.
இது இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அகௌரவம், அவப்பெயர். நல்லாட்சி பால் குடத்தில் சாணத்தை போட்டது போல் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒரு புறம் தமது குறுகிய அரசியல் தந்திரத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களுக்கு சட்டத்தை செயற்படுத்த இடமளிக்கப்படுவதில்லை.
இதற்கு தடையேற்படுத்தும், அழுத்தம் கொடுக்கும் நபர்கள் இருக்கின்றனர். ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பதிலாக தமது அரசியல் தந்திரத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்துவது நல்ல என அவர்கள் எண்ணுகின்றனர் எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகம்: சந்தேக நபரை தேடி காவல்துறையினர் வலைவீச்சு
» அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக 4000 முறைப்பாடுகள் - எவன்கார்ட் தொடர்பில் மற்றுமொரு விசாரணை
» இலங்கை அரசாங்க பத்திர விவகாரம்! ரணிலின் மிரட்டலுக்கு வங்கி அதிகாரியின் பதில்: விக்கிலீக்ஸ் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum