Top posting users this month
No user |
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி வரி சலுகை: கவனம் செலுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
Page 1 of 1

இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி விட்டு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளதாக அதன் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பதில் பணிப்பாளர் உகோ அஸ்டுதோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். குறித்த வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையும்,ஐரோப்பிய ஒன்றியமும் சிறந்த புரிந்துணர்வுடன் கூடிய வேலைத்திட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணக்கப்பாடுகளுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மனித உரிமைகளை பாதுகாப்பது, தொழிலாளர் உரிமை, சுற்றுச் சூழல் கொள்கை, நாட்டின் நல்லாட்சி போன்றவை கவனத்தில் கொள்ளப்படும்.
இந்த இணக்கப்பாடுகளின் அடிப்படையில் இலங்கை செயற்படுமாயின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்க தயார். இது தொடர்பில் இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் உகோ அஸ்டுதோ குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதேவேளை இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மனித உரிமை பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அஸ்டுதோ, மனித உரிமை தொடர்பில் சாதகமான முன்னேற்றத்தை காண முடிவதாக கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கையின் இறுதிக்கட்டத்தில் யுத்தத்தின் போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப விசாரணைகளை நடத்துவது முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum