Top posting users this month
No user |
Similar topics
ரணிலுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையில் சந்திப்பு
Page 1 of 1

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஸ்ரீகொத்தாவில் சந்தித்து விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இலங்கையின் புதிய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது.
அத்துடன் மிக முக்கிய விடயமாக கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை மீளக் கையளிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்துவதாகவும், அதற்கான உரிய நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்வதாகவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலின் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஆர்.நஜா முஹம்மத், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் ஐயூப் ஆகியோர் உள்ளிட்ட தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் சந்திரிகாவும் இணைவார்?
» பாப்பாண்டவருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
» ஜனாதிபதி - விமாப்படை தளபதிக்கு இடையில் சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum