Top posting users this month
No user |
போர்ட் சிட்டித் திட்டம் தவிர்ந்த ஏனைய சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்கின்றன!– ராஜித
Page 1 of 1

போர்ட் சிட்டித் திட்டம் தவிர்ந்த ஏனைய சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சீன நிதி உதவி மற்றும் கடன் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக கடந்த அரசாங்கம் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விடவும் குறைந்தளவான பணமே அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளத் தேவைப்படுகின்றது.
ஊழல் மோசடிகளைத் தவிர்த்து நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் சீன அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் எனவும், சீன அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீன விஜயம் தொடர்பில் விளக்கம் அளிக்கும் நோக்கில் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum