Top posting users this month
No user |
19ற்கு எதிரான மனுக்கள் நாளை விசாரணை
Page 1 of 1
19ற்கு எதிரான மனுக்கள் நாளை விசாரணை
19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இந்த மனுக்களை விசாரிப்பதற்காக மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், இந்த குழுவின் தலைவராக செயற்படவுள்ளதுடன், சந்திரா ஏக்கநாயக்க மற்றும் பிரியசாத் டெப் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
இது நீதிக்கு முரணானது என தெரிவித்து இதுவரை 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த தேவையில்லை என மேலும் நான்கு முனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த மனுக்களே நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன என உயர் நீதிமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை 19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய இன்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum