Top posting users this month
No user |
Similar topics
ஆன்மீக வாழ்வில் முன்னேற
3 posters
Page 1 of 1
ஆன்மீக வாழ்வில் முன்னேற
ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து படுக்கையிலிருந்து எழும் போதும், இரவு படுக்கைக்கு போகும் போதும், ஏதாவது ஒரு பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். விடியற்காலையில் எழுந்திருக்கும் போதே, “பகவானே… இன்றைய பொழுது நல்லபடியாக போக வேண்டும். எண்ணிய காரியங்கள் நிறைவேற வேண்டும்…’ என்று தியானம் செய்வது நல்லது. அதேபோல், இரவு படுக்கும்போதும், “பகவானே… உன் அருளால் இன்றைய பொழுது நல்லபடியாக போயிற்று. இரவு நான் தூங்கும்போது, நீ, என்னை ரட்சிப்பாயாக…’ என்று தியானித்தபின் படுப்பதும் நல்லது. இந்த ஜென்மா நிரந்தரமானதல்ல. என்றோ ஒரு நாள் போக வேண்டியது; அது எப்போது, எப்படி போக வேண்டும் என்பது முன்னதாக விதிக்கப்பட்டு விடுகிறது; அதை மாற்ற முடியாது. அகாலத்தில் ஏற்படக் கூடிய மரணத்தை, பகவான் தடுத்து விடலாம். ஆயுள் முடிந்தவனை அவராலும் காப்பாற்ற முடியாது. எப்போது முடிகிறது என்று தெரியாதபடியால், தினமும் அவனை தியானம் செய்து வந்தால், ஒரு சில ஆபத்துகள் நீங்கலாம். மரணம் என்பதை சில நாள் தள்ளிப் போடலாம். அப்படியே ஒருநாள் போய் விட்டாலும், பகவான் நாமா சொன்ன புண்ணியம் அவனுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். விடியற்காலையில் எதை எல்லாம் நினைத்தால், எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும் என்பதை, பகவானே ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். இதை விடியற்காலையில் நினைக்க மறந்தாலும், கடைசி காலத்திலாவது நினைக்கலாம் என்று ஒரு மாற்று யோசனையையும் கூறியுள்ளார். அப்படி நினைக்க வேண்டியவை: பகவான், கஜேந்திரன், கஜேந்திரனும், முதலையும், மலைகள், காடுகள், தேவ விருட்சங்கள், பிரம்மா, விஷ்ணு, பாற்கடலில் பகவானின் ஆபரணங்களான ஸ்ரீவத்சம், சங்கு, கருடன், ஆதிசேஷன், லட்சுமிதேவி, நாரதர்,
ram1994- Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014
Re: ஆன்மீக வாழ்வில் முன்னேற
தாங்கள் குறிப்பிட்ட தகவல் அருமை சகோதரரே
கடைபிடிக்க முயலுகிறேன்.....
கடைபிடிக்க முயலுகிறேன்.....
siththan- Posts : 22
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014
Re: ஆன்மீக வாழ்வில் முன்னேற
அருமையான பதிவு கடைபிடிக்க வேண்டியதும் கூட
ujiladevi forum- Posts : 9
மன்றத்தில் இணைத்த தேதி : 02/12/2014
Similar topics
» வாழ்வில் முன்னேற வளமான 1001 கருத்துக்கள்
» முன்னேற வேண்டாமா?
» நினைவாற்றலுடன் வாழ்க்கையில் முன்னேற
» முன்னேற வேண்டாமா?
» நினைவாற்றலுடன் வாழ்க்கையில் முன்னேற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum