Top posting users this month
No user |
அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாத இந்தியரை பொலிஸார் தாக்கிய வழக்கில் திடீர் திருப்பம்
Page 1 of 1

அமெரிக்காவில் இந்தியரை தாக்கிய அமெரிக்க பொலிஸ் அதிகாரி மீது தற்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த சுரேஷ் பாய் படேல் (57) என்பவர், அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் மேடிசன் நகர் பகுதியில் வசித்து வரும் தனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தையை பார்க்க சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 6ம் திகதி அவர் அந்தப் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது, அவர் மீது சந்தேகமடைந்த நபர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து நடந்த பொலிசார் விசாரணையில், ஆங்கில மொழி தெரியாத சுரேஷ் பாய் படேல், எனக்கு ஆங்கிலம் தெரியாது, நான் இந்தியர் என கூறியுள்ளார்.
அப்போது எரிக் பார்க்கர் (26) என்ற பொலிஸ் அதிகாரி அவரை மடக்கி கீழே பிடித்து தள்ளியதில் அந்த முதியவர் முடமானார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இதில் இந்தியா தலையிட்டு, அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது.
இதற்கிடையே எரிக் பார்க்கர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை பணி நீக்கம் செய்யுமாறு அரசுக்கு மேடிசன் காவல் துறை பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அரசு வழக்கறிஞர் குழுவினர், எரிக் பார்க்கர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.
அதில், சுரேஷ் பாய் படேலை கீழே தள்ளிவிட்டு எரிக் பார்க்கர் முடமாக்கி விட்டார். பார்க்கரின் செயல்கள், அமெரிக்க அரசியல் சாசனத்தின்படி, பாதிக்கப்பட்ட நபர் உரிமையை இழக்க செய்துள்ளது.
தங்களது பதவிப்பிரமாணத்தின்மீது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை காக்காமல், அதனை மீறி பலப்பிரயோகம் செய்த ஒருவர் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் எரிக் பார்க்கர், தன் மீதான குற்றசாட்டை மறுத்துள்ள நிலையில், அவர் மீது அடுத்த மாதம் 29ம் திகதி நீதிமன்ற விசாரணை தொடங்கவுள்ளது.
மேலும், இவ்வழக்கில் எரிக் பார்க்கர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அமெரிக்க மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum