Top posting users this month
No user |
Similar topics
இரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி? - குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் விளக்கம்
Page 1 of 1

இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்கும் நாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினருக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப படிவங்கள் www.immigration.gov.lk என்ற எமது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அந்தந்த நாடுகளிலுள்ள எமது தூதரகங்களில் கையளிக்க முடியும். அல்லது குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துக்கு வந்து நேரடியாக கையளிக்க முடியும்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினர் இரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி? என்று குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க விவரித்தார்.
அவர் கேள்வி - பதிலாக வழங்கியுள்ள விளக்கம் வருமாறு
கேள்வி: இரட்டை பிரஜாவுரிமை குறித்து விளக்குவீர்களா? குறிப்பாக எந்தெந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் பிரஜாவுரிமை பெறுவதற்கு தகுதியுடையவர்களாவர்?
பதில்: இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்கும் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். உலகில் சில நாடுகளில் இரட்டை பிரஜாவுரிமைக்கு அங்கீகாரம் வழங்குவதில்லை. எனவே, அங்கீகரிக்கும் நாடுகளில் வசிக்கும் முன்னாள் இலங்கையர்களும் இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
கேள்வி: இவ்வாறு இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் இலங்கை பிரஜைகளுக்கு இலங்கையில் குறிப்பிட்டளவு சொத்துகள் இருக்க வேண்டுமா?
பதில்: 55 வயதுக்கு மேற்பட்டவராகவிருந்தால் அல்லது இலங்கையில் 25 லட்சம் ரூபாவுக்கு அதிகமான சொத்துகள் இருக்க வேண்டும். அல்லது இலங்கை மத்திய வங்கி, அங்கீகரித்த வங்கியொன்றில் மூன்று வருடங்களுக்கு மேலாக 25 லட்சம் ரூபாவை நிரந்தர வைப்பிலிட்டிருக்க வேண்டும். அல்லது வதியாதோர் வெளிநாட்டு நாணய கணக்கில் (N.R.F.C) 25 ஆயிரம் டொலர்கள் மூன்று வருடங்களுக்கு மேலாக வைப்பிலிருந்திருக்க வேண்டும்.
மற்றும் திறைசேரி உண்டியல்கள் அல்லது பங்குகளில் 25 டொலர்களுக்கு அதிகமான தொகை மூன்று வருடங்களுக்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் கல்வி மற்றும் தொழில்சார் ரீதியில் டிப்ளோமா அல்லது பட்டம் பெற்றிருந்தால் அவர்களுக்கும் விண்ணப்பிக்க முடியும்.
கேள்வி: குறிப்பாக, எந்தெந்த நாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினருக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் எனக் கூறமுடியுமா?
பதில்: இதன் அடிப்படை என்னவென் றால். குறிப்பாக, நோர்வே இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்குமானால் அங்குள்ள இலங்கையர்கள் விண்ணப்பிக்கலாம்.
கேள்வி: இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்கும் நாடுகள் இனம் காணப்பட்டுள்ளவை?
பதில்: ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா பிரான்ஸ், சுவிட்ஸ்ர்லாந்து, சுவீடன், நியூஸ்லாந்து, இத்தாலி போன்ற ஒன்பது நாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினர் விண்ணப்பிக்கலாம்.
கேள்வி: இந்தியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரும் இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியுமா?
பதில்: இந்தியா இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்கவில்லை. அதனால் அங்குள்ள இலங்கை வம்சாவளியினர் இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது.
கேள்வி: இலங்கையின் இரட்டை பிரஜாவுரிமை நிறுத்தப்படுவதற்கு முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு இலங்கை மீண்டும் இரட்டை பிரஜாவுரிமை வழங்கத் தீர்மானித்த பின்னர் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டுமா? சிலர் இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்து பணம் செலுத்தும்படி அறிவிக்கப்பட்ட நிலையில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை இலங்கையில் இடைநிறுத்தப்பட்டது. இவர்களின் நிலையென்ன?
பதில்: விண்ணப்பிக்கும் தகுதிகள் மாறுபடவில்லை. இருந்தும் விண்ணப்பங்கள் மாற்றமடைந்துள்ளன. எனவே அவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
கேள்வி: வெளிநாடுகளில் வசிக்கும் இல ங்கை வம்சாவளியினருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதால் இலங்கைக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?
பதில்: இலங்கையின் வர்த்தக, பொருளாதார அபிவிருத்திக்கு உந்து சக்தியாக விளங்கக் கூடியவர்களுக்கே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுகின்றது.
கேள்வி: இரட்டை பிரஜாவுரிமை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் இப்போது விநியோகிக்கப்படுகின்றனவா?
பதில்: ஆம் கடந்த 23ம் திகதியிலிருந்து விநியோகிக்கப்படுகின்றது. விண்ணப்பபடிவங்கள் www.immigration.gov.lk என்ற எமது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை பதிவிறக்கம் செய்து
அதை பூர்த்தி செய்து அந்தந்த நாடுகளிலுள்ள எமது தூதரகங்களில் கையளிக்க முடியும். அல்லது குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துக்கு வந்து நேரடியாக கையளிக்க முடியும்.
கேள்வி: பணம் எங்கு செலுத்துவது? விண்ணப்பிக்கும் நாடுகளில் செலுத்த வேண்டுமா? அல்லது இலங்கைக்கு வந்து தான் செலுத்த வேண்டுமா?
பதில்: இரட்டை பிரஜாவுரிமைக்கான விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சர் அனுமதியில் கைச்சாத்திட்டதும் விண்ணப்பதாரிகள் இலங்கை வந்து பணத்தை செலுத்த வேண்டும்.
கேள்வி: விண்ணப்பித்த நாளிலிருந்து நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு பிரஜாவுரிமை வழங்க எவ்வளவு காலமெடுக்கும்?
பதில்: இந்த நடைமுறைகள் பூர்த்தியாக சுமார் ஒன்றரை மாதங்களாகலாம். விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதும், விண்ணப்பதாரி பணம் செலுத்திய பின்னர் சான்றிதழில் அமைச்சர் கைசாத்திடுவார். அதன்பின்னர் உரியவரிடம் கையளிக்கப்படும்.
கேள்வி: கடந்த காலங்களில் சுமார் 400 வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியுமா?
பதில்: இலங்கையின் தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய நலனுக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய நபர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது.
கேள்வி: இரட்டை பிரஜாவுரிமை பெற எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?
பதில்: பெரியவர்களுக்கு 2,50,000 ரூபா. விண்ணப்பதாரியின் கணவன் அல்லது மனைவிக்கு 50,000, திருமணமாகாத 21 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு 50,000 ரூபா செலுத்த வேண்டும்.
கேள்வி: இரட்டை பிரஜாவுரிமை குறித்து உள்நாட்டு வெளிநாட்டு பிரஜைகளுக்கு விசேடமாக குறிப்பிட வேண்டிய விடயங் கள் ஏதாவது இருக்கின்றனவா?
பதில்: இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் அதை பெற உங்களுக்குள்ள தகுதிகளை சான்றுகளுடன் குறிப்பிடுவதுடன், முறையாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் எமது இணையத்தளத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் கிடைத்ததும் அதை ஒரு குழு ஆராய்ந்து சிபாரிசுகளை செய்யும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பி அவரது கைச்சாத்து பெறப்படும்.
கேள்வி: வடக்கிலிருந்து பெரும் தொகையானோர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்று வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்யமுடியுமா?
பதில்: இரட்டை பிரஜாவுரிமை பெற்ற ஒரு நபர் இலங்கை பிரஜையொருவர் பெறும் சகல உரிமைகளையும் பெற உரித்துடைவராகின்றார். எனவே அவர் இலங்கையில் எந்த பகுதியிலும் முதலீடு செய்ய முடியும்.
கேள்வி: இரட்டை பிரஜாவுரிமை பெறுப வர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியு மா? வாக்களிக்க முடியுமா?
பதில்: தேர்தல்கள் சட்டத்திட்டங்களின் படி தேர்தல் ஆணையாளரே அதை தீர்மானிப்பார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெளிநாட்டிலுள்ள 400 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க தீர்மானம்
» வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
» வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
» வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
» வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum