Top posting users this month
No user |
மீனவர்கள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு
Page 1 of 1

இலங்கை, இந்தியா மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர இந்திய மீனவர்கள் முன்வைத்த திட்டம் குறித்து ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளது.
இந்த சந்திப்பு எதிர்வரும் 2ம் திகதி இடம்பெறும் என கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நிமால் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி வடமாகாண மீனவ சங்கங்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண மீன்பிடி அமைச்சர் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
சென்னையில் கடந்த 24ம் திகதி இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்திய மீனவர்கள் ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த திட்டத்தில் 3 வருடங்களுக்கு இலங்கை கரையிலிருந்து 5 கடல் மைல் தூரத்தில் 83 நாட்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
இது தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசம் தருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டு கொண்ட நிலையிலேயே ஜனாதிபதியுடன் எதிர்வரும் 2ம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum