Top posting users this month
No user |
கிணற்றில் தவறிவிழுந்த குட்டி.. காப்பாற்ற 11 மணிநேரம் போராடிய தாய் யானை
Page 1 of 1

ஜார்கண்ட் மாநிலத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த தன்குட்டியை காப்பாற்றுவதற்காக 11 மணி நேரம் போராடிய தாய் யானையின் அன்பு, காண்பவர்களை கண்கலங்க செய்துள்ளது.
நேற்று முன்தினம் சத்தாரா மாவட்டத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் தனது குட்டியுடன் யானை ஒன்று சென்றது.
தாயின் அரவணைப்பில் வந்து கொண்டிருந்த குட்டி யானை, இரவு நேரம் என்பதால் திடீரென நிலை தடுமாறி ஒரு கிணற்றுக்குள் விழுந்தது.
தனது குட்டியின் அலறலைக் கேட்டு பதட்டமடைந்த தாய் அந்த இருள் சூழ்ந்த இடத்தில் செய்வதறியாமல் திகைத்தது. இருப்பினும், அந்த கிணற்றின் அருகில் உள்ள மண்ணை சாதுர்யமாக அகற்றி கிணற்றுக்குள் போவதற்கு சாய்வு தளம் போன்ற அமைப்பை உருவாக்கியது.
இப்படியாக இரவு 9 மணியிலிருந்து அந்த கிணற்றை விட்டு, ஒரு அடி கூட நகராது தனது குட்டியைக் காப்பாற்றுவதற்காக தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் அந்த தாய் யானை செய்து கொண்டிருந்தது.
பின்னர் விடியற்காலையில் அப்பகுதி வழியாக வந்த கிராம மக்கள் சிலர் யானையின் இந்த நிலைமையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கிணற்றில் குட்டி தவிப்பதைக் கண்டு பரிதாபமடைந்து மொத்த கிராமமும் அதனை மீட்கும் பணியில் இறங்கினர். ஆனால் தாய் யானை, கோபமாக அருகில் இருந்ததால், ஒரு லொரியில் வாழைப்பழத்தைக் கொண்டு வந்து அதன் கவனத்தை திசை திருப்ப முயற்சித்தனர்.
இரவெல்லாம் மண்ணைக் கிளறி அழுது பிளிறிக் கொண்டிருந்த யானை, பசியால் லொரியின் பக்கம் போனது.
உடனே கிராம மக்கள் அனைவரும் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி இழுத்து, ஒரு வழியாக குட்டி யானையை பத்திரமாக மேலே கொண்டு வந்தனர்.
தன் குட்டியைப் பார்த்த மகிழ்ச்சியில் சத்தமாக பிளிறியபடி கிராம மக்களுக்கு தன் நன்றியை சொன்ன தாய் யானை, தனது குட்டியுடன் காட்டுப் பயணத்தை தொடர்ந்தது.
தன் குட்டியை மீட்க இரவெல்லாம் போராடிய தாய் யானையின் இந்த பாசப் போராட்டம் பார்ப்பவரை உருகச் செய்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum