Top posting users this month
No user |
Similar topics
பயங்கரவாதத்திற்கு இனி ஒரு போதும் இடமில்லை: பிரதமர்
Page 1 of 1

நாட்டினுள் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் ஒருபோதும் தலைதூக்க இடமளிக்கப்போவதில்லை என்றும் பயங்கரவாதிகள் தற்பொழுது உலகம் முழுவதும் செயற்படுவது பல்வேறு முகங்களில் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று அலரி மாளிகையில் தேசிய ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான 'தேசிய ஒற்றுமைக்கான செயலகம்' ஒன்று உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களை உடனடியாகக் கைது செய்யக்கூடிய அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தைப் பயன்படுத்தி, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவே அரசாங்கத்தால் முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேசடிகளுடன் தொடர்புடையவர்களா என்று விசாரணை செய்து அவர்களுக்குரிய தண்டனையை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திடமே உள்ளதாகவும், அவசரகாலச் சட்டத்தை மீண்டும் பலப்படுத்தி சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கோ அல்லது தடுத்து வைப்பதற்கோ தற்போதய அரசாங்கத்திற்கு எந்தவொரு தேவையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சினைக்கான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கும் நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சிகளுக்குமே உள்ளது. இந்த விடயத்தில் நான் இந்த நாட்டின் பிரதமர் என்ற வகையிலேயே செயற்படுவேன் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இலங்கையினுள் எந்தவொரு பகுதியிலும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. ஜாதி, மத பேதமின்றி அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமெனவும் அதற்காக அனைத்து தரப்பினரும் தங்களது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை பலப்படும் வகையில் ஊடகங்களும் செயலாற்ற வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது கோரியுள்ளார்.
நாட்டுக்குள் நிதிக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதே இந்த அரசாங்கத்தின் அடுத்த நோக்கமாகும். அதற்கான புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிக்கிணங்க, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல தரப்பினர், நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். குறித்த விடயத்தில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்பை அடுத்து இப்பிரச்சினைக்கான தீர்வு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் முறையை மாற்றியமைப்பது குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் அது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நான் ஒரு போதும் தப்பி ஓடிப்போகவில்லை: மஹிந்த
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum