Top posting users this month
No user |
Similar topics
விமானத்தின் இறுதி நிமிடங்கள்..!அலறிய பயணிகள்..!கதவை பலமாக தட்டிய தலைமை விமானி! பரபரப்பு தகவல்
Page 1 of 1

150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் துணை விமானியால் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
விமானத்தை மலையில் மோதச் சென்ற போது விமானிகள் கூக்குரலிட்டதாகவும் அதனை துணை விமானி கண்டுகொள்ளவில்லை எனவும் தலைமை விமானி கதவை பல முறை பலமாக தட்டி, உதைத்துள்ளதாகவும் ஆனால் துணை விமானி அமைதியாக இருந்து விமானத்தை மலையில் மோதியுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ எயார் பஸ் ஏ-320 விமானம், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டொர்ப் நகருக்கு கடந்த 24ம் திகதி 150 பேருடன் சென்றபோது விபத்துக்குள்ளானது.
பிரான்ஸ் நாட்டில் எல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், செய்ன் லெஸ் எல்ப்ஸ் என்ற கிராமத்துக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 150 பேரும் உயிரிழந்தனர்.
அவர்களில் 72 பேர் ஜெர்மானியர்கள், 51 பேர் ஸ்பெயின் நாட்டினர், 3 பேர் அமெரிக்கர்கள். இங்கிலாந்து, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கொலம்பியா, டென்மார்க், இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, ஈரான், நெதர்லாந்து, மொராக்கோ நாட்டினரும் பலியானவர்களில் அடங்குவர்.
கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும் விமானத்தின் சிதைவுகளையும், பலியானவர்களின் உடல்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலண்டே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் ஆகியோர் நேற்று சென்றனர்.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் ஒரு கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்து, விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி பதிவுகள் ஆராயப்பட்டுள்ளன.
அதில் விமானிகளில் ஒருவர், விபத்துக்கு முன்னதாக விமானி அறையை விட்டு வெளியே சென்றதும், அவர் திரும்ப வந்த போது விமானி அறை கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரி ஒருவர், “வெளியே சென்ற விமானி, மீண்டும் வந்து கதவை லேசாக தட்டியுள்ளார். பதில் இல்லை. அதன் பின்னர் கதவை வலுவாக தட்டியுள்ளார். அதற்கும் பதில் இல்லை. அதன்பின்னர் எந்தப் பதிலும் இல்லை என்பது விமானி அறை ஒலிப்பதிவு கருவி மூலம் தெரிய வந்துள்ளது” என கூறியதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வரை ஓயப் போவதில்லை என்று பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே கூறினார்.
விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்ஸ் விமானம் எதற்காக கீழே இறங்கியது என்பது குறித்து எந்த முடிவுக்கும் இப்போதைக்கு வர முடியவில்லை. இப்போதுதான் ஒரு ஒலிப்பதிவு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது அதை ஆய்வு செய்ய வேண்டும்” என பிரான்ஸ் விசாரணை குழு தெரிவித்துள்ளது.
விசாரணையில் தொடர்புடைய இராணுவ உயர் அதிகாரி ஒருவர், “விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி, விமானிகள் இடையே மிகவும் இணக்கமான வகையில் உரையாடல்கள் நடந்ததைத்தான் காட்டுகின்றன.
விமானிகளில் ஒருவர் வெளியே சென்றுள்ளார். அவர் எதற்காக வெளியே சென்றார் என்பது தெரியவில்லை. ஆனால், விமானத்துக்கு முடிவு ஏற்பட்ட போது, விமானி அறையில் ஒரு விமானிதான் இருந்திருக்கிறார், அவர் கதவைத் திறக்கவில்லை என்பது தெளிவாகின்றது என்றார்.
தீவிரவாத தாக்குதல் குறித்த சந்தேகம் எழவில்லை என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பேர்னட் காஸிநியூவ் தெரிவித்துள்ளார்.
என்னதான் நடந்தது என்பதை இப்போது உறுதியாக கூற முடியாத போதும், நடுவானில் விமானம் வெடித்து சிதறி இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தின் 2ஆவது கருப்பு பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தீர்ப்பை திருத்த அணுகிய நீதிபதி குமாரசாமி..சந்திக்க மறுத்த கர்நாடக தலைமை நீதிபதி: பரபரப்பு தகவல்
» விமானி அறைக்குள் வைத்து கேப்டனை தாக்கிய துணை விமானியால் பரபரப்பு
» இளைஞரின் இதயத்தை 40 நிமிடங்கள் நிறுத்தி சிகிச்சையளித்த மருத்துவர்கள்: திக் திக் நிமிடங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum