Top posting users this month
No user |
Similar topics
வடக்கு முதல்வரை புறக்கணித்த ரணில்: ரணிலை புறக்கணித்த சிறிதரன்
Page 1 of 1

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்காது புறக்கணித்துள்ளார்.
இது தொடர்பாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில் வடக்கு முதல்வர், நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு அழைப்பவிடுக்காது, ஏனைய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது தமிழ் மக்களின் தேசிய ஒற்றுமையை சிதறடிப்பதன் வடிவமே.
எனவே வடக்கு மாகாண முலமைச்சரை புறக்கணித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பங்குபற்றும் நிகழ்வுகளை நானும் புறக்கணிக்கின்றேன். இலங்கையின் பிரதமராக அவருடைய உத்தியோகபூர்வ பணிமனையின் ஊடாக வடக்கு மாகாணத்தின் சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்து, அந்த அழைப்பின் பிரகாரம், அவர் பங்குபற்றும் நிகழ்வுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றுவதே பொருத்தமானது.
அதை விடுத்து மாவட்ட அரச செயலகங்களில் உள்ள அதிகாரிகளினூடாக அழைப்பு விடுத்து அரச உயர் பண்பாட்டு நாகரிகங்களை மீறி, ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவது கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராகிய எனக்கு பொருத்தமற்றது.
கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உக்கிரவடிமாக ரணில் விக்கிமசிங்க திகழ்கின்றார். தமிழ் தேசியத்தின் மீதான தீராத தாகம் கொண்டு பயணிக்கும் கொள்கைவாதிகளையும், மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் பிரித்து ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களின் சுதந்திர தாகம் கொண்ட ஆன்மாவை அடக்கலாமென அவர் செயற்படுவதாகவே உணரமுடிகின்றது.
வடக்கு, கிழக்கிலும், மலையகத்திலும் ஏன் உலகமெல்லாம் வாழும் புலம்பெயர் மக்களினதும் ஏகோபித்த வரவேற்பையும் மதிப்பையும் பெற்ற கடந்த வடமாகாண சபை தேர்தலில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் விருப்புவாக்குகளையும் பெற்ற வடக்கு மாகாண முதலமைச்சரை புறக்கணித்து வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்வுகளை நடத்துவதானது ஜனநாயகத்திற்கும், நல்லாட்சிக்கும், இன சகிப்புத்தன்மைக்கும், நல்லிணக்கத்துக்கும், மக்கள் ஆணைக்கும் வைக்கப்பட்ட வேட்டாகும்.
கடந்த கால வரலாற்று பாடங்களை தமிழ்மக்களாகிய நாம் உற்று நோக்கும் போது இன்றைக்கும் தன் பௌத்த பேரினவாத சிந்தனையில் இருந்து வெளிவராத தென்னிலங்கைத் தலைமைகளின் ஒரு வடிவமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளதை நாம் உணர்கின்றோம் என அவரது அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடக்கு - கிழக்கில் இரகசிய முகாம்கள் இல்லை: பிரதமர் ரணில்
» வடக்கு மக்களுக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது: ரணில் விக்ரமசிங்க
» வரவு செலவுத்திட்டத்தை புறக்கணித்த மஹிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum