Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தவறில்லாத அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க மஹிந்தவுக்கு வாய்ப்பு!

Go down

தவறில்லாத அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க மஹிந்தவுக்கு வாய்ப்பு! Empty தவறில்லாத அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க மஹிந்தவுக்கு வாய்ப்பு!

Post by oviya Fri Mar 27, 2015 1:28 pm

கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தவறில்லாத அரசியல் பயணத்தை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மக்கள் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின்ன தலைவர் விமல் வீரவன் தெரிவித்துள்ளார்.
இதனை எழுச்சி பெற்று மேலெழ மக்கள் வழங்கிய வரமாக கருத வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய் நாடு ஆபத்தில் – மகிந்தவுடன் நாட்டை வெற்றிபெற செய்வோம் என்ற தெனிப்பொருளில் இரத்தினபுரி சீவலி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள அரசியல்வாதிகள் எப்போதும் தயாராக இருக்கின்றனர்.

இந்த விமர்சனங்களின் அடிப்படையில், தவறுகள், குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து, மீண்டும் வெற்றிகரமான பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.

அதேவேளை இந்த கூட்டத்தில் உரையாற்றிய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வர ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தை எந்த விதத்திலும் கைவிடப் போவதில்லை என கூறியுள்ளர்.

இதனிடையே இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி இது குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக வேறு கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

எனினும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum