Top posting users this month
No user |
கழிவெண்ணெய் கலப்புடன் எமக்கு தொடர்பில்லை: நோர்தன் பவர் நிறுவனம்
Page 1 of 1

குடிநீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லையென நோர்தன் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோர்தன் பவர் நிறுவனத்தின் குழும நிறுவனமான எம்.டி.டீ. வோர்கர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் லால் பெரேரா இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் ஏற்பட்ட கழிவெண்ணெய் கசிவு தொடர்பில் ஆய்வு செய்வதற்காக வடமாகாண சபையினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழு மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில் சுன்னாகம் நிலத்தடி நீரில் பார உலோகங்கள் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
சுன்னாகம் பகுதியிலுள்ள கிணற்று நீரின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த குழு தெரிவித்துள்ளது.
சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான ஆய்வின் முதற்கட்ட அறிக்கை யாழில் வெளியிடப்பட்ட போது நிலத்தடி நீர் கழிவு எண்ணெய் தொடர்பான செயலணியின் தலைவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பேராசிரியருமான டொக்டர் டி.ரி.ஜயசிங்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கழிவெண்ணெய் கலப்பதற்கு நோர்தன் பவர் நிறுவனமே காரணமென எமது நிறுவனத்திற்கு எதிராக சில குழுவினர் சுமத்திய குற்றச்சாட்டு போலியானது என குறித்த குழுவின் ஆய்வில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் சில எண்ணெய்க் குளங்களும் சேதமாக்கப்பட்டிருந்தன எனினும் எமது நிறுவனத்தின் கழிவு எண்ணெய் மீள்சுழற்சிக்காக மாத்திரமே விற்பனை செய்யப்படுகின்றன என அவர் மேலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum