Top posting users this month
No user |
தேர்தலுக்கு முன்னர் மகிந்த ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட உள்ளனர்
Page 1 of 1

பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்படும் முன்னர், மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்படுவார்கள் என இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர், தனது அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
அனுரபிரியதர்ஷன யாப்பா, சஜின்வாஸ் குணவர்தன, சாலிந்த திஸாநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, குமார வெல்கம, சரண குணவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, விமல் வீரவன்ஸ், மகிந்தானந்த அளுத்கமகே, மகிந்த அமரவீர ஆகியோரில் ஐவரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளனர் என தெரியவருகின்றது.
இவர்கள் தவறு செய்தார்களோ இல்லையோ அவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் கூறியுள்ளார். இவர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மனித உரிமை பிரச்சினை எழுந்தாலும் அது பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்னர் இவர்களில் 5 பேரை கைது செய்வதே பணிப்பாளரின் இலக்காக இருப்பதுடன் அரசாங்கத்தின் முக்கிய தரப்பொன்று அதற்கான ஆலோசனைகளை வழங்கியிப்பதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை கைது செய்த பின்னர், தனக்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி மோசடியாளர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதாக தில்ருக்ஷி விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum