Top posting users this month
No user |
Similar topics
மனித உரிமைகள்
Page 1 of 1
மனித உரிமைகள்
விலைரூ.175
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: புத்தா பப்ளிகேஷன்ஸ்
பகுதி: பொது
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
புத்தா பப்ளிகேஷன்ஸ், 18, விக்டோரியா கிரசன்ட் சாலை, எழும்பூர், சென்னை-8. (பக்கம்: 352)
உலக வரலாற்றை மாற்றிய மாபெரும் புரட்சிகள் என்று மூன்றைக் குறிப்பிடலாம். பிரஞ்சுப் புரட்சி, அமெரிக்க சுதந்திரப் போர், ரஷ்யப் புரட்சி. இவற்றில் இரண்டு புரட்சிகள் நடந்தேறிய காலத்தில் வாழ்ந்து அவற்றில் பயன் நிறைந்த வகையில் ஈடுபட்டு பங்காற்றும் பேறு பெற்றவர் தாமஸ் பெயின்.பிரஞ்சு புரட்சிக்கு பின் உருவான தேசிய சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். இங்கிலாந்து நாட்டில் பிறந்தவரான தாமஸ் பெயின் புரட்சியின் போது லூயி மன்னர் கொல்லப்பட்டதால், பிரான்சை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார்.
அமெரிக்க விடுதலைப் போரின் போது, மன்னராட்சியும், பிரபுக்கள் ஆட்சியும் மனித இனத்தின் மீது தீர்க்கப்பட்ட மோசடி என்ற கருத்துக் கொண்டு பொது அறிவு நூலை எழுதி வெளியிட்டார். பின்னர் நெருக்கடி என்ற நூலை எழுதினார்.பிரஞ்சு புரட்சிக்கு எதிராக இங்கிலாந்து நாட்டின் எட்மண்ட் பர்க் வெளியிட்ட கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அமைந்ததே தாமஸ் பெயின் எழுதிய இந்த மனித உரிமைகள் நூலில் முதல் பகுதியாகும். முதல் பகுதி 1791லும், இரண்டாம் பகுதி 1792லும் வெளியிடப்பட்டன.
போர் என்ற சிந்தனையே இல்லாத ஒரு சமூகத்தை பொருளாதாரச் சமநிலை பெற்ற ஓர் உலகச் சமுதாயத்தை உருவாக்குவதற்கு தாமஸ் பெயின் என்ற மனிதர் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிந்தித்தார். ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தந்தார். சிந்தனைக்கு கிடைத்த புதுத்திறவுகோல் இந்நூல் என்றே சொல்லலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum