Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மஹிந்தவுக்கு ஆதரவாக காலி பேரணியில் களமிறங்கும் முத்துஹெட்டிகம

Go down

மஹிந்தவுக்கு ஆதரவாக காலி பேரணியில் களமிறங்கும் முத்துஹெட்டிகம Empty மஹிந்தவுக்கு ஆதரவாக காலி பேரணியில் களமிறங்கும் முத்துஹெட்டிகம

Post by oviya Fri Mar 20, 2015 11:51 am

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் முயற்சியில் காலியில் பேரணி இடம்பெற்றால் அதில் ஏறும் முதல் நபர் நான் என பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மகிந்த மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்திலேயே உள்ளார்கள். ஆனால் அதை வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள்.

நான் சென்று மகிந்தவை சந்தித்து நலன்களை விசாரித்துள்ளேன். நாங்கள் விழுந்திருக்கும் இந்த சேற்றுகுழியில் இருந்து வெளியில் வருவதற்கு தலையிடுமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

எங்கள் நாட்டின் அரசாங்கத்தில் உள்ள பாரிய பணிகளை பொறுப்பெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ஆயத்தமாகவே உள்ளார். மகிந்தவிற்கு ஆதரவாக நடைபெற்ற நுகேகொடை பேரணியில் நான் கலந்துக்கொள்ளவில்லை, கண்டி பேரணியிலும் கலந்துக்கொள்ளவில்லை.

ஆனால் காலியில் பேரணி இடம் பெற்றால் பேரணி மேடையில் கால் வைக்கும் முதல் நபர் நான் என பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum