Top posting users this month
No user |
தொழிலதிபரை நிர்வாண படமெடுத்து கடத்திய கும்பல்: பொலிசார் அதிரடி வேட்டை
Page 1 of 1

கேரளாவில் தொழிலதிபர் ஒருவரை பெண் ஒருவர் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாண படமெடுத்து கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எலவத்தூரை சேர்ந்த தொழிலதிபர் மோகன் என்பவர் மாலா சர்க்கிள் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், நான் அங்கமாளில் உள்ள நட்சத்திர விடுதியில் தனி அறை எடுத்து தங்கியபோது எனக்கு தெரியாமல், பூஜா என்ற லட்சுமி (30) மற்றும் இவரது நண்பர்கள் ரஞ்சித் (29), அருண் (24) என்னை நிர்வாண படம் எடுத்து கடத்தி ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்கள்.
நான் அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பி வந்துவிட்டேன். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர் மணிலால் பெண் பொலிசாருடன் தேடுதல் வேட்டை நடத்தியபோது நகரசபை அலுவலகம் அருகே நின்ற லட்சுமி, ரஞ்சித், அருண் ஆகியோரை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளார்.
மேலும் பொலிசார் இதுபற்றி கூறுகையில், தொழிலதிபர் மோகனிடம் பணம் பறிக்க முயன்ற இந்த கும்பல் இதையே தொழிலாக கொண்டவர்கள் என்றும், இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum