Top posting users this month
No user |
21 லட்சத்திற்கு ஒரு பைசா குறையக்கூடாது: அதிகாரி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்
Page 1 of 1

திருநெல்வேலி வேளாண் துறை அதிகாரி கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி வேளாண் துறை அதிகாரி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20ம் திகதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து சிபிசிஐடி பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி வேளாண்மை துறையில் தற்காலிகமாக 7 ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் மேலதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால், முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து சிபிசிஐடி நடத்திய விசாரணையில், முத்துக்குமாரசாமியின் கைப்பேசிக்கு வேளாண்துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா, வேளாண்துறை உயர் அதிகாரிகள், நெல்லை அதிமுக பிரமுகர்கள் சிலர் பேசியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அதிமுக பிரமுகர் ஓட்டுனர் நியமனத்திற்கு சிபாரிசு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மேலும் ஒரு அதிமுக பிரமுகரும் வேளாண் கூட்டுறவு துறையை சேர்ந்த பிரமுகரும், 21 லட்சத்திற்கு ஒரு பைசா குறைந்தால்கூட லஞ்ச வழக்கில் சிக்க வைப்போம் என்று முத்துக்குமாரசாமியை மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் நேரடியாக தொடர்புடைய 6 பேர் பட்டியலை தயாரித்துள்ள பொலிசார், இந்த 6 பேரையும் கைது செய்து விசாரிக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum