Top posting users this month
No user |
Similar topics
செய்தி ரணிலின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ராஜித
Page 1 of 1

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு உரிமையுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்திற்கு அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏன் மீண்டும் NDTVக்கு இவ்வாறு கருத்து வெளியிட வேண்டும் என்ற கேள்விக்கு, இந்திய மீனவர்களின் ஊருடுவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மீனவர்களின் ஆதரவை பெறும் நோக்கத்துடன் ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்தை வெளியிட்டிருக்கலாம் என ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த கருத்தினை தான் அங்கீகரிக்கவில்லையென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன இந்திய ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனான ரணில் விக்கிரமசிங்கவின் மோதலின் ஒரு பகுதியாகவும் இது அமைந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவான மீனவர்களை பிரதமர் தன் பக்கம் திருப்ப முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ள ராஜித குறிப்பிட்டுள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதற்கு மீனவர்களினை மாத்திரம் குற்றம்சாட்ட முடியாது. ரோலர் படகுகளின் உரிமையாளர்களையும் குற்றம்சாட்ட வேண்டும், அவர்களே மீனவர்களை எல்லை தாண்டுவதற்காக அழுத்தங்களை கொடுக்கின்றனர் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தெரிவித்திருப்பது ஓரு கவலை தரக்கூடிய கருத்து இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரணிலின் கருத்திற்கு மகிந்த ஆச்சரியம் தெரிவிப்பு
» சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித
» வாசக நேயர்களுக்கு தமிழ்வின் இணையம் தெரிவிக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum