Top posting users this month
No user |
கோத்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாதுகாப்புத் தலைமையக கட்டடப் பணிகள் நிறுத்தம்
Page 1 of 1

மகிந்த அரசாங்கத்தினால் பத்தரமுல்லையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பாதுகாப்புத் தலைமையக வளாக கட்டட நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டட நிர்மாணத்துக்கான நிதி இல்லாமையாலேயே இந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்துக்கான சரியான செலவு மதிப்பீடும் செய்யப்படாமல் நிதியை விடுவிக்க முடியாது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பா அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிர்மாணப் பணியை மேற்கொள்ள தேவையான நிதி உள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கான நிதி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் வரை அதை விடுவிக்க முடியாது. இந்த திட்டத்துக்கான உண்மையான செலவு என்ன? செலவுக்கான அமைச்சரவை அனுமதி எங்கே பெறப்பட்டது?
எந்தவொரு ஆவணத்திலும், இந்த திட்டத்துக்கான சரியான செலவு மதிப்பீடு பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
ஒரு ஆவணத்தில் 50 பில்லியன் ரூபா செலவிலான இந்த திட்டத்தில், 2.5 வீதத்தை, இதனுடன் தொடர்புடைய கட்டக்கலை நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிதி விடுவிக்கப்பட முன்னர், இந்த விபரங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
சிஏரிஐசி மற்றும் சங்கிரி-லா உடன்பாடுகள் மூலம், பாதுகாப்பு அமைச்சுடி முறையற்ற கணக்கில் நிதியைத் திரட்டிருந்தது.
பொறுப்புமிக்க ஒரு அரசாங்கத்தினால், வரிசெலுத்துவோரின் பணத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவை நிச்சயம் நல்லதேவைக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
தற்போதைய நிலையில் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம், அமெரிக்காவின் பென்டகனை விடவும், பெரிய வளாகத்தைக் கட்டியிருக்க முடியும்.
செலவு மதிப்பீட்டைக் கையளிப்பதில் தான் தான் நிதியை விடுவிக்கும் விவகாரம் தங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு பத்தரமுல்லை, அக்குரேகொடவில் பாதுகாப்புத் தலைமையக வளாகத்தை அமைப்பதற்காக 20 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நாடாளுமன்ற அனுமதி பெறப்பட்டது.
அப்போதைய அரசாங்கம் இந்த திட்டம் 2013ம் ஆண்டில் நிறைவடையும் என்று கூறியிருந்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum