Top posting users this month
No user |
“புல்லட்டுக்கு கோவில்” கடவுளாக வணங்கும் மக்கள்
Page 1 of 1

ராஜஸ்தானில் புல்லட்டுக்கு கோயில் கட்டி, கடவுளாக மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ராஜஸ்தானில ஜோத்பூர்-பாலி நெடுஞ்சாலையில் உள்ள சோட்டிலா என்ற கிராமத்தில் புல்லட் பாபா என்ற கோவில் உள்ளது.
சோட்டிலா கிராமத் தலைவரின் மகன் ஓம் சிங் ரத்தோர் என்ற ஓம் பானா, கடந்த 1991ம் ஆண்டு அருகிலுள்ள பாலி நகரத்திற்கு சென்றுவிட்டு தனது புல்லட் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
தற்போது கோயில் இருக்கும் இடம் அருகில் வந்தபோது சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதி புல்லட் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓம் பானா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த பொலிசார் விபத்துக்குள்ளான அந்த புல்லட் மோட்டார்சைக்கிளை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மறுநாள் காலை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதையடுத்து அதனை பொலிசார் தேடியபோது, அது விபத்துக்குள்ளான இடத்திலேயே கிடந்தது பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எவ்வாறு இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று தெரியாததால், யாரோ விளையாட்டுக்கு செய்திருக்கலாம் என்று நினைத்த பொலிசார் அந்த மோட்டார் சைக்கிளை காவல் நிலையத்திலேயே மீண்டும் நிறுத்தினர்.
மேலும், வண்டியில் இருந்த பெட்ரோலை எடுத்துவிட்டு, இரும்பு சங்கிலியை போட்டு கட்டிப் போட்டுள்ளனர்.
ஆனால், அதற்கு அடுத்த நாள் காலையிலும், மோட்டார்சைக்கிளை காணாமல் போனதாக தெரிகிறது.
அன்றும் அதேபோல விபத்துக்குள்ளான இடத்திலேயே நின்றிருந்ததால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த பொலிசார் அந்த பைக்கை அங்கேயே விட்டுவிட்டனர்.
இந்த செய்தி ஊருக்குள் காட்டுத் தீ போல பரவியதோடு அந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்களும் நிகழத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து ஓம் பானாவுக்கும், புல்லட்டுக்கும் அங்கு கோயில் அமைத்தனர்.
ஓம் பன்னாவின் படங்களை அதில் வைத்ததுடன், அந்த புல்லட் மோட்டார் சைக்கிளையும் பக்கத்திலேயே நிறுத்தி அதற்கும் பூஜைகளை தொடங்கினர்.
இதனால், அங்கு விபத்துக்கள் குறைந்ததாக அந்த ஊரை சேர்ந்தவர்கள் நம்புகின்றனர்.
அந்த வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த கோயிலில் நிறுத்திவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
மேலும், ஓம் பானாவுக்கும், புல்லட்டுக்கும் மாலைகளை போட்டு வணங்கி வருவதுடன், ஓம் பன்னாவை "புல்லட் பாபா" என்று வழிபட்டு வருகின்றனர்.
தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்ல ஆரம்பித்ததோடு, அந்த கோயிலுக்கு வரும் ஓட்டுநர்கள் மது பாட்டில்களோடு வந்து புல்லட் மோட்டார்சைக்கிள் மேல் இரண்டு மூன்று துளி மதுவை தெளித்துவிட்டு செல்வது வழக்கமாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum