Top posting users this month
No user |
காதலித்துவிட்டாயே: நடுரோட்டில் மகளின் தலைமுடியை பிடித்து உதைத்த பொலிஸ்
Page 1 of 1

பெங்களூரில் தந்தை ஒருவர் தனது மகளின் தலைமுடியை பிடித்து நடுரோட்டில் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு கணனி நிறுவனமொன்றில் திட்ட மேலாளராக பணியாற்றி வருபவர் நிவேதிதா சக்ரவர்த்தி.
இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணை அவரது தந்தை நடுரோட்டில் தலை முடியை பிடித்து இழுத்து அடித்து உதைக்கும் படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படங்கள் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து நிவேதிதா சக்ரவர்த்தி கூறியதாவது, நானும் எனது தோழி அர்ச்சனாவும் அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது ரோட்டில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை அவளது தந்தை(மதுரையை சேர்ந்த பொலிஸ் சப்–இன்ஸ்பெக்டர்) தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்து கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்தை அந்த பெண்ணின் தாய்(பள்ளி ஆசிரியை) வேடிக்கை பார்த்துக்கொண்டு கணவருக்கு ஆதரவாக, குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டாயே என்று திட்டி தீர்த்து கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்தை அந்த ரோட்டில் சென்ற 50–க்கும் மேற்பட்டவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
நான் இளம் பெண்ணை அடித்த நபரின் பிடியில் இருந்து தலை முடியை விடுவித்தேன். அதற்குள் அந்த பெண் கீழே விழுந்துவிட்டார். அந்த நபரை பின்னால் தள்ளிவிட்டு எனது காரில் அந்த பெண்ணை ஏற்றினேன்.
ஆனால் அந்த நபர் காரின் முன்பகுதியில் அமர்ந்து கொண்டு காரை எடுக்கவிடாமல் தடுத்தார்.
இந்த நிலையில் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அந்த பெண் யாரையோ விரும்புவதை அறிந்த தந்தை, நடுரோட்டில் அவரை தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கூட கேட்கவில்லை.
மாறாக வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை மதுரைக்கு இழுத்து சென்று தாங்கள் விரும்பும் நபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, 3 பேரும் இது எங்கள் குடும்ப விவகாரம் நாங்களே பேசித்தீர்த்து கொள்கிறோம் என்று கூறிவிட்டதாகவும் புகார் எதுவும் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum