Top posting users this month
No user |
Similar topics
கிரேக்க கலாசாரம் தோன்றும் முன்னமே இந்தியாவில் ஜனநாயகம் தோன்றியது: ரணில் - இந்திய பிரதமருக்கு புகழாரம் சூட்டிய எதிர்க்கட்சித் தலைவர்
Page 1 of 1

ஜனநாயக கட்டமைப்பு கிரேக்க கலாசாரம் தோன்றுவதற்கு முன்னமே இந்தியாவில் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்த போது உரையாற்றிய, அவர் இதனை கூறினார்.
கௌதம புத்தரின் காலத்தில் இருந்த அரச நிர்வாகம் இதற்கு சிறந்த உதாரணமாக கூற முடியும்.
இலங்கையின் அனுராபுரம் மற்றும் பொலன்நறுவை பிரதேசங்களில் பிராந்தியத்தின் பண்டைய கால நாகரிகம் இதற்கான உதாரணம்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் பல நெடுங்காலத்தை கொண்டது.
சோழர், பாண்டியர், இளவரசன் விஜயனின் வருகை என்பது இதற்கு உதராணங்களாகும்.
இந்திய பெருங்கடலில் பிரதான பொறுப்பு இந்தியாவிற்குரியது. இலங்கைக்கு அந்த பொறுப்பு இருக்கிறது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இந்திய பிரதமருக்கு புகழாரம் சூட்டிய எதிர்க்கட்சித் தலைவர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒழுங்கம் நிறைந்த நேர்மையான, திறமையான தலைவர் என எதிர்க்கட்சித தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டினார்.
நாடாளுமன்றத்திற்கு சென்ற இந்திய பிரதமரை எதிர்க்கட்சியின் சார்பில் வரவேற்று பேசிய போதே அவர் இதனை கூறினார்.
அசோகா மன்னர் தனது மகன் மஹிந்த தேரரையும் மகள் சங்கமித்தவையும் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்த இலங்கைக்கு அனுப்பி காட்டிய அனுசரணையை எவரும் மறக்கவில்லை.
புத்தகாயா, பணாரஸ், குசினாரா போன்ற பௌத்த வழிப்பாட்டுத் தலங்களுக்கு லட்சக்கணக்கான இலங்கையர்கள் சென்று வருகின்றனர் .
பிரதமர் நரேந்திர மோடி குடும்ப பலமின்றி தனது பலத்தில் முன்னேறியவர். நல்லொழுக்கம், நேர்மை மற்றும் திறமையான தலைவர் என்று உங்களை கருத முடியும்.
குஜராத் மாநிலத்தை அபிவிருத்தி செய்ய நீங்கள் எடுத்த முயற்சியானது உங்களது விவசாய அறிவின் வெற்றிகரமான நடவடிக்கை என்றும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த ஜனரஞ்சகமான தலைவர்: தினேஷ் புகழாரம்
» எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியுள்ள முக்கிய விடயங்கள்
» நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நிச்சயம் கையொப்பமிடுவேன்!- எதிர்க்கட்சித் தலைவர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum