Top posting users this month
No user |
மனைவியை கொன்ற பிரிகேடியருக்கு மரண தண்டனை!
Page 1 of 1

மனைவியை கொலை செய்த முன்னாள் இராணுவ பிரிகேடியர் ஒருவருக்கு கம்பஹா மேல் நீதமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
புத்தளம் இராணுவ முகாமில் ஒரு காலத்தில் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் டோன் சந்தன ரூபாசிங்க என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கம்பஹா மாவட்டம் சபுகஸ்கந்த மாகொல, ஆலய வீதியில் உள்ள வீடொன்றில் இந்த கொலை நடந்துள்ளது. மரணம் கொலை அல்ல தற்கொலை என வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.
எனினும் அரச இரசாயன பகுப்பாய்வு மற்றும் பிரேத பரிசோதனைகளில் மரணமான பெண் தற்கொலை செய்யவில்லை எனவும் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிபதி பியசீலி விக்ரமசிங்க மத்துரட்ட தெரிவித்தார்.
பிரிகேடியர் ரூபசிங்க, தனது துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நீதிபதி கூறினார். கொலை குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum