Top posting users this month
No user |
Similar topics
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை: அமலுக்கு வரும் சட்டம்
Page 1 of 1

தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை இந்த மாதம் முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி அரசிதழை வெளியிட்டுள்ளார்.
அந்த அரசிதழில், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013 என்ற சட்டம் 15-ம் திகதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு அறிவிக்கிறது.
அதன்படி வரும் 15-ம் திகதியில் இருந்து எந்தவொரு தனிநபரோ, உள்ளாட்சி அமைப்போ, முகமையோ தங்களின் ஊழியரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மனிதக் கழிவுத் தொட்டியை (செப்டிக் டாங்க்) கழுவும் ஆபத்தான பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து பணீந்திர ரெட்டி கூறுகையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிய நடவடிக்கைகள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனி நபர்களும் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டாங்கில் இனி மனிதர்களை இறக்கிவிட்டு சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளக் கூடாது.
மேலும், இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இயந்திரங்கள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனிதக் கதை
» கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதனால் துர்நாற்றம்: பிரதேசவாசிகள் விசனம்
» மனிதக் கல்லீரல் வேண்டுமா? விலை 5,100 ரூபாய் மட்டுமே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum