Top posting users this month
No user |
பஸ் விபத்தில் இருவர் காயம்!- லிந்துலை வைத்தியசாலை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!
Page 1 of 1

ஹற்றனிலிருந்து மஸ்கெலியா சாமிமலை பிரதேசத்தை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் தியசிரிகம பகுதியில் வைத்து வேகமாக சென்றதனால் அதில் பயணித்த பாடசாலை மாணவி ஒருவரும்,ஆசிரியர் ஒருவரும் கீழே விழுந்து அடிப்பட்டதால் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக, விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அடிப்பட்ட ஆசிரியைக்கு கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவிக்கு காலில் பலமாக அடிப்பட்டுள்ளதனால் மாணவியை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் ஆசிரியை சிகிச்சைகளின் பின் வீடு திரும்புவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்தின் பேரில் பஸ் சாரதியை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum