Top posting users this month
No user |
Similar topics
மொஹான் பீரிஸ் மற்றும் சேனாதிபதியின் கடவுச்சீட்டை முடக்க நீதிமன்றம் மறுப்பு
Page 1 of 1

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் கடவுச்சீட்டை முடக்குமாறு வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு என்பவரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மொஹான் பீரிஸ் பிரதம நீதியராசாக இருக்கும் போது வழங்கிய உத்தரவுகளினால் அரசாங்கத்திற்கு 619 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளதினால் விசாரணைகள் நிறைவு பெறும் வரை மொஹான் பீரிஸின் கடவுச்சீட்டை முடக்குமாறு சட்டத்தரணி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு குறித்து விவாதிக்க மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும்,
உயர் நீதிமன்றத்திற்கு மாத்திரமே அவ் அதிகாரம் காணப்படுகின்றது எனவும் அரச சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளதுடன், சட்டத்தரணி கொடித்துவக்குவின் மனுவிற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அரச சட்டத்தரணியின் வாதத்தை ஏற்று கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவின் மனுவை நிராகரித்துள்ளது.
எவன்காட் தலைவரின் கடவுச்சீட்டை முடக்க நீதிமன்றம் மறுப்பு
எவன்காட் கடல் பாதுகாப்பு சேவை தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க சேனாதிபதியின் கடவுச்சீட்டை முடக்குமாறு குற்றத் தடுப்புப் பிரிவு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கோரிய போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மிதக்கும் ஆயுத கப்பல் களஞ்சியம் குறித்த நீதிமன்ற நடவடிக்கையில் சேனாதிபதியின் பெயர் சந்தேகநபர் பட்டியலில் இல்லாத காரணத்தால் கடவுச்சீட்டை முடக்க முடியாது என நீதிமன்றம் தெளிவுடுத்தியுள்ளது.
வழக்கின் பிரதிவாதியாக சேனாதிபதியை பெயரிடுவதா இல்லையா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படவுள்ளது. இதேவேளை எவன்காட் நிறுவனம் மோசடி செய்திருக்கவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu5D.html#sthash.mYMjpW0x.dpuf

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ்
» மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்புக்களும் சூன்யமாக்கப்பட வேண்டும்: சரத் என் சில்வா
» மகிந்த, கோத்தபாயவிற்கு வெள்ளை வான் அச்சுறுத்தல்?: ஜீ.எல்.பீரிஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum