Top posting users this month
No user |
மைத்திரி அரசு அமெரிக்காவின் கைப்பாவையல்ல: கயந்த கருணாதிலக்க
Page 1 of 1

வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளுக்கான ஒப்பந்த செலவு 60 மில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நிர்மாண பணிகளுக்காக ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனமே இத்தொகையை குறைத்து நிர்மாண பணிகளை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
மஹிந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை காரணங்கள் எதுவும் இன்றி, தற்போதய அரசாங்கம் இடை நடுவே நிறுத்தி விடுவதாக எதிர்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சில அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சில அபிவிருத்தி திட்டங்கள் பெயர் பலகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அவ்வாறான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து அவற்றினையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் தற்போதய அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் முன்னின்று செயற்படும்.
அத்துடன் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தையும் செயற்படுத்த முன் நிற்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவின் கைப்பாவைகளாக உள்ளது என எதிர்கட்சியினர் கூறுவதில் அர்த்தமில்லை.
எனினும் கடந்த அரசாங்கத்தின் மூலம் இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள அபிப்பிராயத்தை சாதகமாக்கிக் கொள்ள 15 கோடி ரூபாவினை ஐந்து பாரிய கம்பனிகளுக்கு செலுத்த நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் அவர்களே இரட்டை வேடம் போடுகின்றார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.
மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் மாளிகைகள் தொடர்பில் தகவல்கள் கசிந்து வரும் நிலையில் அதனை மறைப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், ஒளடதங்கள் மூலம் 800 வீத இலாபம் பெற்று வந்த நிலைமையை, புதிய ஒளடத சட்டமூலத்தின் மூலம் மருத்துவ நிறுவனங்கள் இழக்கின்றது என்று தெரிவித்த அமைச்சர் தரமான ஒளடதங்கள் சலுகை விலையில் எதிர்வரும் காலங்களில் மக்கள் பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum