Top posting users this month
No user |
மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக வேண்டும்: சுனில் ஹந்துநெத்தி
Page 1 of 1

பத்திரங்கள் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் நம்பிக்கை இழக்கப்பட்டமையினால் மத்திய வங்கி ஆளுனர் பதவி விலக வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஒப்பந்த பத்திர விநியோகத்தின் போது இடம்பெற்ற மோசடி நடவடிக்கை குறித்து ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சில செய்திகள் ஊடகங்களில் திரிபுபடுத்தி கூறப்பட்டுள்ளதினால் இப்பிரச்சினை பொது மக்களின் விளங்கிக்கொள்ள கூடிய வகையில் இல்லை.
மத்திய வங்கி கோரியிருந்த ஆயிரம் மில்லியன் கடன் ஒப்பந்த பத்திரம் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு எவ்வாறு சென்றது?
அத்துடன் ஆயிரம் மில்லியன் எவ்வாறு 10 ஆயிரம் மில்லியனாக அதிகரித்தது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
எனவே இது தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது மாதிரியான ஒரு மோசடி வேறொரு நாட்டில் நிகழ்ந்திருந்தால், அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் பொறுப்புடன் தலையிட்டிருந்திருப்பார்.
இப்பிரச்சினை தொடர்பில் சரியான தீர்ப்பு நிதி அமைச்சர் பதவி விலகுவதே எனினும் நம் நாட்டில் அவ்வாறு நடக்காது என அறிந்திருப்பதால் நாங்கள் அதனை எதிர்பார்க்கவில்லை.
ஆனால் இது தொடர்பிலான விசாரணைகள் நிறைவு பெறும் வரை மத்திய வங்கி ஆளுனர் பதவி விலக வேண்டும் என சுனில் ஹந்துநெத்தி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை பொதுத் தேர்தல் அறிவிப்பு மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து தெளிவான அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் எனவும் சுனில் ஹந்துநெத்தி வலியுறுத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum