Top posting users this month
No user |
Similar topics
கார்ட்போர்ட் வன்சக்களுக்கு தேவையான வகையில் சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுக்காது: டிலான் பெரேரா
Page 1 of 1

கார்ட்போர்ட் வன்சக்களுக்கு தேவையான வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுக்காது என கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சில கார்போர்ட் வன்சக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேவையான வகையில் செயற்பட்டு வருகின்றனர்.
சுதந்திரக் கட்சியினால் விதிக்கப்பட்ட தடையையும் மீறி கண்டிக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும்.
கட்சியின் ஐக்கியத்திற்கும் கட்சியின் தனித்துவ அடையாளத்திற்கும் குந்தகம் ஏற்படாத வகையில் இந்த ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும்.
எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையான வகையில் செயற்பட்டு வரும் கார்ட்போர்ட் வன்சக்களின் வாக்குகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவ்வாறான நபர்கள் இந்த ஒழுக்காற்று விசாரணைகள் குறித்து பதற்றமடையத் தேவையில்லை.
தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் ஆகியோர் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வெளிநாட்டு விஜத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டிலான் பெரேரா நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கண்டிக் கூட்டத்திற்கு சென்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தினால் கட்சி பிளவடையும் என முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச சுதந்திரக் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறியதனை காட்டினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன்: டிலான்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக எப்போதும் கூறவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக எங்காவது தெரிவித்துள்ளமையை காண்பித்தால் அந்த சந்தர்ப்பத்திலேயே நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்யவே மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
கட்சியை பிளவடையச் செய்யும் சில தரப்பினரும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான ஊடகங்களுமே இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியுடன் நான் தான், நாடாளுமன்றிற்கு வருமாறு மஹிந்தவிற்கு அழைப்பு விடுத்தேன்.
முதலில் அந்த அழைப்பினை மஹிந்த ஏற்றுக்கொண்டார்.
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தனது பதவியை துறக்க ஆயத்தமாகியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கான ஆவணங்களையும் மஹிந்த கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கு அனுப்பி வைத்திருந்தார்.
பின்னர் தொலைபேசி மூலம் அழைத்து திட்டத்தை மாற்றிக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கப் போவதில்லை எனவும் மஹிந்த குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்யிடுவதாக அறிவித்தால் அதனை எவரும் எதிர்க்கப் போவதில்லை. கட்சியை மீளக் கட்டியெழுப்பிய மிகப் பெரிய பெருமை அவரையே சாரும்.
எனினும் கட்சியை பிளவுபடுத்தவும் ரணிலின் ஒப்பந்தங்களுக்காக செயற்படும் தரப்பினரும் மஹிந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்ற பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர் என டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சுதந்திரக் கட்சி எச்சரிக்கை
» மகிந்தவின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்! டிலான் பெரேரா கோரிக்கை
» ஐ.ம.சு.முன்னணி புதிய பயணத்திற்கு தயாராகின்றது: டிலான் பெரேரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum