Top posting users this month
No user |
நுவரெலியா பிரதேச சபை உறுப்பினா்கள் இருவர் புதிதாக நியமிப்பு
Page 1 of 1

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக மலையக கூட்டமைப்பின் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கரபத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த சச்சிதானந்தன் மற்றும் லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த நாகராஜா ஆகியோர் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு கட்சி தாவினர்.
இதற்கு எதிராக அவர்கள் வகித்த பிரதேச சபை உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தொழிலாளர் தேசிய சங்கத்தினால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களின் பதவியையும் இரத்துச் செய்யுமாறு தீர்ப்பளிக்கப்பட்டதுடன் சச்சிதானந்தன் மற்றும் உறுப்பினர் நாகராஜ் ஆகிய இருவரையும் பதவியும் நீக்கம் செய்வதற்கான அரசாங்க வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பதவியிலிருந்து நீக்கிய இந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பதிலாக திரு. பொன்னையா ரவிச்சந்திரன், திரு. ராமலிங்கம் விஜயவீரன் ஆகிய இரண்டு பேர் தொழிலாளா் தேசிய சங்கத்தின் சார்பில் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினராக நியமித்து இந்த இருவரும் நுவரெலியா பிரதேச சபையில் இன்று நுவரெலியா பிரதேச சபை தலைவா் என்.சதாசிவன் முன்னிலையிலும் தொழிலாளா் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் முன்னிலையிலும் பதவி பிரமாணம் செய்து கொண்டார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum