Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிளிநொச்சி புதுக்காடு அழகாபுரி மாணவர்களுக்கு ஜேர்மன் வாழ் தாயக உறவுகள் உதவி!

Go down

கிளிநொச்சி புதுக்காடு அழகாபுரி மாணவர்களுக்கு ஜேர்மன் வாழ் தாயக உறவுகள் உதவி! Empty கிளிநொச்சி புதுக்காடு அழகாபுரி மாணவர்களுக்கு ஜேர்மன் வாழ் தாயக உறவுகள் உதவி!

Post by oviya Sun Mar 08, 2015 12:21 pm

கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்புறத்தில் இருந்து தொலையில் இருக்கின்ற கிராமங்களான இராமநாதபுரம் புதுக்காடு அழகாபுரி போன்ற கிராமங்களின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஊக்கம் கொடுக்கும் விதமாக யாழ்ப்பாணம் கிளநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க ஜேர்மனி வாழ் தாயக உறவுகள் அப்பியாப்புத்தகங்களை வழங்கியுள்ளது.
நேற்று புதுக்காடு அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ள வெற்றிப்பாதை சனசமூகநிலையத்தில் அதன் தலைவர் சீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்களான சுவிஸ்கரன் செல்லத்துர,இராமநாதபுரம் கிழக்கு பாடசாலையின் முதல்வர் புண்ணியமூர்த்தி,பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உபதலைவருமான பொன்.காந்தன்,கிராம அபிவிருத்திசங்கதலைவர் வில்வரட்ணம் செயலாளர்,கமல் மாதர் சங்க தலைவி விக்னேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமளவான மாணவர்கள் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.இங்கு கலந்துகொண்ட பாடசாலை முதல்வர் புண்ணியமூர்த்தி கருத்துக்கூறுகையில், எமது வாழ்க்கை நகர்ப்புறங்களில் இருந்து தொலைவுகளில் அமைந்திருந்தாலும் இங்கு அடிப்படை வசதிகள் முழுமையாகும் நிலையில் ஒரு மனிதன் அமைதியாக கற்பதற்குரிய சூழல் இதுவாகத்தான் இருக்கும்.

இன்றைக்கு இருக்கின்ற நவீன உலகச்சூழலில் நமது மாணவர்களும் நிலைபெறுவதற்கு புலம்பெயர் மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர்.எமது கிராமத்தில் சிறிய இலவச கணணி பயற்சி மையம் ஒன்று அமைத்து நமது மாணவர்களுக்கு கணனி தொடர்பான அடிப்படை அறிவை தற்பொழுது போதித்துவருகின்றோம்.

இந்த அப்பியாசக்கொப்பிகள் கூட எமது மாணவர்களின் சுமையை குறைக்கின்ற உதவியாக அமைக்கின்றது.இன்று இருக்கின்ற மாணவர்களுக்கு தேவைகள் அதிகம்.அந்த தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பொருளாதார வழிகளுக்கான தேடல்களிலும் எமது கிராமத்தின் பொது அமைப்புக்கள் முயல்கின்றன.

அதற்கு ஜேர்மன் வாழ் தாயக உறவுகள் போன்ற அமைப்புக்கள் மேலும் உதவும் என்று நம்புகின்றோம்.எமது கிராமத்தில் மிகவும் கஸ்டப்பட்டு படித்து பட்டதாரிகள் ஆனவர்கள் இருக்கின்றார்கள்.ஆனால் இன்று இன்னும் வேலை வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.படிப்பிக்க தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் அவர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு பாடசாலைகளில் நிதிவளமின்மை காணப்படுவதாக சொல்லப்படுகின்றது என தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum