Top posting users this month
No user |
Similar topics
சிறுநீரக நோய் தொற்று அதிகரிப்பு: இலங்கைக்கு உதவும் சீனா
Page 1 of 1

இலங்கையில் தற்பொழுது அதிகரித்து வரும் சிறுநீரக நோய்த் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, சீனாவின் பிரபல விஞ்ஞானியொருவர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஷியாங்லியங் உறுதியளித்துள்ளார்.
நேற்று முன்தினம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்குமிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஷியாங்லியங்குக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே, அமைச்சர் ஹக்கீமிடம் சீனத்தூதுவர் மேற்கண்ட உறுதியினை வழங்கியுள்ளார்.
இலங்கையின் வடமத்திய மற்றும் வடகிழக்கு உட்பட்ட பிரதேசங்களில் சிறுநீரக நோயாளர்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாகவும், இரசாயன பொருட்கள், செயற்கைப் பசளை என்பன நிலக்கீழ் நீரில் கலப்பதன் காரணமாகவே, சிறுநீரக நோய் அதிகளவில் ஏற்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்த நோயினைக் கட்டுப்படுத்துவதற்கும், குணப்படுத்துவதற்கும் சீனா போன்ற நாடுகளின் நவீன தொழிநுட்ப, மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் சீனத் தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோளொன்றினை முன்வைத்துள்ளார்.
இதேவேளை, சிறுநீரக நோயாளர்கள் அதிகமுள்ள பின்தங்கிய கிராமப் புறங்களில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்காக, தற்பொழுது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘ஆர்ஓ’ எனப்படும் ரிவேர்ஸ் ஒஸ்மோசிஸ் எனும் செயற்பாடு பற்றியும் இதன்போது அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த மேற்படி வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட சீனத் தூதுவர் யீ ஷியாங்லியங், இது தொடர்பில் இலங்கைக்கு சீனா உதவும் என உறுதியளித்துள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு நகரினைத் தெரிவு செய்து, அதனை சீனாவின் அபிவிருத்தி அடைந்த நகரோடு இணைத்து செயலாற்றுவதற்கான ஓர் ஏற்பாட்டினைச் செய்யுமாறு, அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோளொன்றினை சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளார்.
அமைச்சரின் இந்த வேண்டுகோளினை, தமது நாடு சாதகமாக பரிசீலிக்குமென்று இதன்போது சீனத் தூதுவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தொற்று நோய் வராமல் தடுக்க
» சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
» சிறுநீரக நோய் குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum