Top posting users this month
No user |
டெல்லி கற்பழிப்பு பற்றிய பேட்டிக்காக 2 லட்சம் பேரம் பேசிய குற்றவாளி: அம்பலமான உண்மை
Page 1 of 1

டெல்லி கற்பழிப்பு தொடர்பான ஆவணப்படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பேட்டிக்காக 2 லட்சம் வரை பேரம் பேசப்பட்டது அம்பலமாகியுள்ளது.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல், 23 வயது மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்தது இந்தியா மட்டுமல்லாமல் உலகையே உலுக்கியது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரான ராம்சிங் என்பவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
மேலும், ஒருவன் இளம் குற்றவாளி என்பதால் குறைந்தபட்ச தண்டனை விதித்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.
மீதியுள்ள 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஒளிபரப்புவதற்காக, இங்கிலாந்தை சேர்ந்த பட இயக்குனர் லெஸ்லீ உத்வின், பி.பி.சி.க்காக ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்தார்.
இதற்காக கற்பழிப்பு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கை இடைத்தரகர் ஒருவர் மூலமாக திகார் சிறையில் தயாரிப்பாளர் அணுகினார்.
சம்பவம் நடந்த அன்று இரவு நடந்தது பற்றி வெளிப்படையாக பேட்டி அளிக்க ஒப்புக்கொண்ட முகேஷ், தனக்கு 2 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என கூறியுள்ளான்.
பின்னர் நடந்த பேரத்தில் 40 ஆயிரம் ரூபாய் வாங்க ஒத்து கொண்ட அவன், இந்த தொகையை அவனது வங்கிக் கணக்கில் போட்ட பின்னரே பேட்டி கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முகேஷின் வங்கிக் கணக்கில் 40 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தொகையை இடைத்தரகராக செயல்பட்டவர் அவனது குடும்பத்தாரிடம் வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum