Top posting users this month
No user |
நரேந்திர மோடியின் மன்னார் விஜயம்: விசேட கலந்துரையாடல்! சுஸ்மா சுவராஜ் இலங்கை வருகிறார்
Page 1 of 1

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மன்னார் விஜயம் தொடர்பாக வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சருக்கும்,இந்திய துணை தூதரகத்தினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மன்னாரில் இடம்பெற்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 14 ஆம் திகதி மன்னார் விஜயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று புதன் கிழமை மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆகாஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இதன் போது வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டேனிஸ்வரன் அவர்களும் இந்திய துணைத் தூதரகத்தின் அரசியல் பிரதிநிதி திரு.எஸ்.டி.மூர்த்தி அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் விசேட சந்திப்பின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்பது தொடர்பாகவும், இந்திய பிரதமரிடம் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட மகஜர் கையளிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
சுஸ்மா சுவராஜ் இலங்கை வருகிறார்
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நாளை இலங்கைக்கு வருகை தருகிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ம் திகதியன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.
இந்தநிலையில் அவரின் விஜயத்துக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகவே சுஸ்மா இலங்கைக்கு வருகிறார்.
இதன்போது அவர் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினரை சந்திக்கவுள்ளார்.
இந்தநிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், காணி அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் அவருடன் பேச்சு நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum