Top posting users this month
No user |
Similar topics
யானை தொல்லைக்கு தீர்வை பெற்றுதாருங்கள்: குகநேசபுர மக்கள் வேண்டுகோள்
Page 1 of 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள மீள் குடியேற்றக்கிராமமான குகநேசபுர கிராமமானது யானைத் தொல்லையால் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990ம் ஆண்டு தங்களது குடியிருப்புக்களை விட்டு இடம்பெயர்ந்து அந்த மக்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் வாழ்ந்து வந்தனர். பின்னர் மீண்டும் 2007ம் ஆண்டு தங்களது இடங்களில் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
64 குடும்பங்கள் வாழும் இக் கிராமத்தில் இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது. நெல் மற்றும் வீட்டுத் தோட்ட உற்பத்திகளிலேயே அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் இக் கிராமத்திற்கு மின்சார வசதிகள் இல்லாததால் இக் கிராமத்தில் யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது. இரவு 08.00 மணிக்கெல்லாம் யானைகள் ஊருக்குள் வந்து இவர்களது தென்னந்தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டங்களை நாசப்படுத்துவதாக இப் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அந்த மக்கள் பயிர்களை முறையாக அறுவடை செய்வதற்கு முன்பாக யானைகளினால் பயிர்கள் அழிக்கப்பட்டு விடுவதாகவும், தாங்கள் படும் கஸ்டத்திற்கு ஊதியம் கிடைக்காமல் போய் விடுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குகநேசபுர கிராமத்திற்கு யானைகள் வராமல் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இக்கிராமத்தில் நாங்கள் இங்கு நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், உடனடியாக மின்சாரத்தினை பெற்றுத் தருமாறும் வேண்டிக் கொள்கின்றனர் குகநேசபுர கிராம மக்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» பொறிவெடியில் சிக்குண்ட காட்டு யானை
» சுமூகமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வை எட்ட முடியும்: வடமாகாண ஆளுனர்
» யானை
» சுமூகமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வை எட்ட முடியும்: வடமாகாண ஆளுனர்
» யானை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum