Top posting users this month
No user |
ஆம் ஆத்மி பதவியில் இருந்து கெஜ்ரிவால் ராஜினாமா? வெடிக்கும் உட்கட்சி மோதல்
Page 1 of 1

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன் அண்மையில் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மியில் அனைத்து அதிகாரங்களும் ஒரு தனி நபரிடமே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இதே பிரச்சினை தொடர்பாக 7 மாதங்களுக்கு முன்னதாக யோகேந்திர யாதவ் கருத்து கூறியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கட்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள யோகேந்திர யாதவ், அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அதனை நானும் பிரசாந்த் பூஷனும் நிராகரித்துவிட்டோம் என்றும் அவர் தொடர்ந்து தேசிய ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் எனவும் கூறியுள்ளார்.
உட்கட்சி மோதல் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், இது என்னை மிகவும் காயப்படுத்துவதாகவும், வேதனை தரக் கூடியதாகவும் இருக்கிறது.
மேலும், இது டெல்லி மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாகும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum