Top posting users this month
No user |
அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பிலான வழக்கு ஒத்தி வைப்பு
Page 1 of 1

அவன்ட் கார்ட் மாரிடைம் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் யாபா சேனாதிபதி வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கோரிய வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அவருடைய கோரிக்கை குறித்து எதிர்வரும் 9ம் திகதி தீர்மானிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த நபரை வெளிநாடு செல்ல அனுமதிப்பதா, இல்லையா என்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு நீதவான் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
வர்த்தக தேவை ஒன்றுக்காக தாம் நைஜீரியா செல்ல அனுமதிக்குமாறு சேனாதிபதி கோரியிருந்தார். இவ்வாறு வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என சட்ட மா அதிபர் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தார்.
காலி துறைமுகத்தில் மஹநுவர என்னும் கப்பலிலும் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திலும் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி சேனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum