Top posting users this month
No user |
இரு வேறு விபத்துச் சம்பவங்கள்: நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் பலி
Page 1 of 1

இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துச் சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு துணை பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி! மூவர் காயம்
நீர் கொழும்பு கதிரானை பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் துணை பொலிஸ் அதிகாரி உயிரழந்துள்ளார்.
மோட்டர் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதனால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபத்தில் மற்றுமொரு துணை பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பலாங்கொடயில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி
தென் மாகாணம் அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பார ஊர்தி ஒன்றும் பேரூந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு காலி பிரதான விதியில் அம்பலாங்கொட அக்குரல பகுதியில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் பாலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பார ஊர்தியின் சாரதியும் உதவியாளருமே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum