Top posting users this month
No user |
போர் வெற்றியைக் காட்டி தண்டனையில் இருந்து தப்பித்துவிட முடியாது: சோபித தேரர்
Page 1 of 1

போர்வெற்றியக் காட்டி குற்றமிழைத்த எவரும் தண்டனையில் இருந்து விடுபடவோ அல்லது தண்டனை வழங்கப்படாமலோ இருக்க முடியாது என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இறுதிப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உண்மையக் கண்டறிவது நல்ல விடயம் எனினும் அதனைக் காட்டி தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம் என எண்ணிவிட முடியாது. உண்மையைக் கண்டறிவதன் மூலமாக இவ்விடயத்தில் தெளிவைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
பாப்பரசர் முதற்கொண்டு உலகத் தலைவர்கள் பலரும் உண்மையைக் கண்டறிய வேண்டும். மறைப்பதற்கு இவ்விடயத்தில் ஏதுமில்லையல்லவா என்று அவர் தெரிவித்தார்.
இறுதிப்போரில் போர்க்குற்றங்கள் உட்பட பாரிய மனித உரிமைமீறல்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இலங்கை மீது சர்வதேசம் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது.
இந்நிலையில், இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் உட்பட உலகத்தலைவர்களும் இறுதிப்போரில் இடம்பெற்ற சம்பவங்கள் குறி்த்த உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர் வெற்றிக்கான கௌரவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபசவுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், அவர் மட்டுமே போர் வெற்றிக்கு காரணமல்ல. அப்படியென்றால் சரத் பொன்சேகா தேங்காய் உரித்துக் கொண்டிருந்தாரா?
போர் வெற்றியைப் பெற்றதற்காக வேறு குற்றங்களை இழைத்திருந்தால் தண்டனை வழங்காது இருக்க முடியாது. போதுமான சாட்சியங்கள் இருக்குமிடத்தில் குற்றச்சாட்டுக்களுக்கு தராதரம் பார்க்காது தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum