Top posting users this month
No user |
இருநாட்டுப் பக்தர்களுடன் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்று
Page 1 of 1

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி கோலாகரமாக நடைபெறவுள்ளது.
இந்தத் திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து பக்தர்கள் நேற்று முதல் வருகை தந்த வண்ணமுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இலங்கையில் இருந்து செல்லும் பக்தர்கள் குறிகட்டுவானில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் விசேட படகுகளில் இன்று காலை முதலே புறப்பட்டுச் செல்கின்றனர்.
நாளைய தினம் காலையில் தேர் பவனி, திருப்பலி பூஜைகளும், கொடி இறக்க நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரத்திலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 4,296 பேர் சனிக்கிழமை புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராமேஸ்வரம் துறைமுகப் பகுதியிலிருந்து 110 படகுகளில் செல்லும் இவர்களின் பாதுகாப்புக்காக, இரண்டு விசைப் படகுகள், இரண்டு நாட்டுப் படகுகளில் 20 மீனவர்கள் செல்கின்றனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக "லைப் ஜாக்கெட்´ வழங்க இராமேஸ்வரம் மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேவேளை திருவிழாவையொட்டி, இராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களும், அவர்களது உடமைகளும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum