Top posting users this month
No user |
Similar topics
வகுப்பறை சண்டையில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி: விளையாட்டு வினையான விபரீதம்
Page 1 of 1

பீகாரில் அரசுத் தொடக்கப்பள்ளி வகுப்பறை ஒன்றில் சிறுமிகள் இடையே விளையாட்டாக தொடங்கிய மோதல் தீவிரமானதில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பீகாரில் கிழக்கு சம்பரன் மாவட்டத்தின் ராம்பூர் டோலாவில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகள் அமருவதற்கு எந்த வசதியும் கிடையாது.
எனவே மாணவ மாணவிகள் சாக்குப்பையில் மட்டுமே அமர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சாக்குப் பையும் அளவில் குறைவாகவே இருந்ததால் அதில் உட்கார குழந்தைகள் இடையே கடும் போட்டி நடப்பதுண்டு.
இந்நிலையில், நேற்று முன்தினம் இதுபோல் சாக்குப்பையில் அமர்வதற்காக நடந்த சண்டையின் போது 1-ம் வகுப்பு படிக்கும் சீதாவை சக குழந்தைகள் 2 பேர் அடித்து கீழே தள்ளியுள்ளனர்.
இதையடுத்து சீதா பள்ளி முடிந்தவுடன் அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் தன் அக்காவிடம் நடந்ததை கூறிக்கொண்டே வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள்.
அப்போது, ஏற்கனவே தாக்கிய அந்த 2 மாணவிகள் சகோதரிகளை சாலையில் வழிமறித்து வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.
அருகில் இருந்த அந்த இருவரின் தாய்மார்களும் சண்டையை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், மயக்கமடைந்த சகோதரிகள் இருவரையும் அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சீதா உயிரிழந்த நிலையில், அவருடைய அக்காவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து தற்போது தாக்கிய 2 மாணவிகள், அவர்களின் தாய்மார்கள், மற்றும் சம்பவத்தின் போது வகுப்பறையில் இருந்த ஆசிரியர் என ஐந்து பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தாயின் குடிபோதையால் பசியில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
» சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம்..பரிதாபமாக போன உயிர்
» ஓடும் பேருந்தில் பாய்ந்த மின்சாரம்.. பரிதாபமாக பலியான 25 பேர்: ராஜஸ்தானில் பயங்கரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum