Top posting users this month
No user |
மீள் குடியேற்றம் சம்பந்தமாக முக்கிய கலந்துரையாடல்! - மீள்குடியேற்றம் குறித்து ஆராய விசேடகுழு நியமிப்பு
Page 1 of 1

வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று காலை ஆளுநர் செயலகத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
வலி வடக்குப் பகுதியில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், காணிகளை தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரிவரும் நிலையில் அந்த நிலங்களில் இருந்து, இராணுவத்தினரின் பாவனையில் இல்லாத நிலங்களை விடுவிப்பது தொடர்பில் நேரில் ஆராயும் முகமாக இன்று காலை குடாநாட்டுக்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், யாழில் உள்ள வடமாகாண ஆளுநரின் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் பளிஹக்காரவுடன் முக்கிய சந்திப்பு ஒன்றை நடாத்தினார்.
யாழ்.குடாநாட்டின் வலி.வடக்கு பகுதியில் உள்ள உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் சுமார் 9ஆயிரம் குடும்பங்களுக்குச் சொந்தமான 6ஆயிரத்து 534 ஏக்கர் காணி படையினர் வசம் உள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் மற்றும் இராணுவ, கடற்படை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில் தீர்மானித்த தீர்மானத்துக்கமைய மீண்டும் மீள்குடியேற்ற அமைச்சர், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர், மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கிடையில் மற்றுமோர் விசேட கலந்துரையாடல் ஆளுநரின் செயலகத்தில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகினறது.
மீள்குடியேற்றம் குறித்து ஆராய விசேடக்குழு நியமிப்பு
வடக்கில் மீள்குடியேற்றம் மற்றும் விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மக்களை மீள்குடியேற்றப்படுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் பலியக்காரஇ அரச அதிபர்கள், பாதுகாப்பு தரப்பின் பிரதானிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விடுவிக்கப்பட்ட ஆயிரம் நிலத்தை உரிமையாளர்களிடம் வழங்குது குறித்து ஆராய்ந்து அறிக்கை அறிக்கை வழங்குவதற்காக விசேட குழுவொன்றை நியமிக்கவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அதிகாரசபையின் தலைவர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஆயிரம் நிலத்தை உண்மையான உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆராய்வது இந்த குழுவின் முக்கிய பணியாகும்.
இதனடிப்படையில் இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை தயாரித்து வழங்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum