Top posting users this month
No user |
நரேந்திர மோடி அரசே..நிலங்களைப் பறிக்கும் சட்டத்தை ரத்து செய்! டெல்லியில் வைகோ ஆவேசம்
Page 1 of 1

நிலப் பறிப்புச் சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி டெல்லியில் நடந்த பிரம்மாண்டமான விவசாயப் பேரணியில் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார்.
மோடி அரசின் நிலப்பறிப்புச் சட்டத்தை எதிர்க்கும் முழக்கங்கள் தாங்கிய அட்டைகளோடு, மீத்தேன் எதிர்ப்பு இயக்கம், நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம், காவிரி பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பிலும் பலர் பங்கேற்றனர்.
அன்னா ஹசாரே மேடைக்கு வந்ததும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றினர்.
பின்னர், 2.30 மணியளவில் வைகோ தனது உரையைத் தமிழில் தொடங்கி, பின்னர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.
அப்போது, ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்றார் திருவள்ளுவர். உலக மக்கள் அனைவரும் விவசாயத்தை மையமாகக் கொண்டு வாழ்கிறார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்கூடச் செய்யத் துணியாத அக்கிரமத்தை நரேந்திர மோடி அரசு செய்கிறது.
விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு, அவர்களுடைய ஒப்புதல் தேவை இல்லை என்கின்ற அளவிற்கு ஒரு கொடூரச் சட்டத்தை இயற்றி இருக்கின்றது.
அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சட்டம் ஆக்கிவிடும் திட்டத்தோடுதான் மத்திய அரசு செயல்படுகிறது.
நரேந்திர மோடி அரசே! பகல் கொள்ளைக்காரனைப்போல நிலங்களைப் பறிக்கும் சட்டத்தை இரத்து செய்!
தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு விவசாய அமைப்புகளின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கே வந்து இருக்கின்றோம். தொடர்ந்து போராடுவோம்! விவசாயிகளுக்கு எதிரான அரசின் திட்டங்களை முறியடிப்போம்! என்று பேசியுள்ளார்.
அன்னா ஹசாரே பேசும்போது, விவசாயிகளுக்குக் கேடு செய்யும் இத்திட்டத்தை எதிர்த்து அடுத்த ஓரிரு மாதங்களில் ராம்லீலா மைதானத்தில் லட்சக் கணக்கானவர்களைத் திரட்டி, சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் மேடைக்கு வந்து அன்னா ஹாசரே அவர்களின் பாதம் பணிந்து ஆசி பெற்றார். விவசாயிகள் பேரணி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum