Top posting users this month
No user |
வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்த விமல்: விசாரணைகளை முடக்கிவிட்ட குற்றபுலனாய்வு திணைக்களம்
Page 1 of 1

விமல் வீரவன்ஸ, இராஜதந்திர கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி பெறுமதியான இரத்தினகற்களை திருட்டு வழியில் வெளிநாட்டுக்கு கொண்டு சென்று, நாடு திரும்பும் போது ஹெரோயின் போன்ற பெறுமதியான போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை கொண்டு வீரவன்ஸ பெரும் சொத்துக்களை சேர்த்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, விமலசிறி கம்லத் என்ற பெயரில் ஹிரு பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் அந்த பத்திரிகை விநியோகத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த காலத்தில் வசதிகள் எதுவுமின்றி இருந்த வீரவன்ஸ, ஹிரு பத்திரிகை அலுவலகத்திலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில், தற்போது 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலமே அவர் இவ்வாறு சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
பல்வேறு மோசடிகள் மூலம் வருமானத்திற்கு மேல் சொத்துக்களை சேர்ந்தமை தொடர்பில் வீரவன்சவுக்கு எதிராக பல்வேறு மூலங்களில் இருந்து தகவல்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் வட்டாரங்கள் கூறியுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum