Top posting users this month
No user |
புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் விமல் வீரவன்ச ஆஜர்! - விமலின் கோரிக்கையை நிறைவேற்றிய புலனாய்வுப் பிரிவினர்
Page 1 of 1

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்ற புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்னதாக விமல் வீரவன்ச இவ்வாறு புலனாய்வு பிரிவிற்கு சென்றுள்ளார்.
வாக்கு மூலமொன்றை அளிக்கும் நோக்கில் விமல் வீரவன்ச இவ்வாறு புலனாய்வுப் பிரிவிற்கு சென்றுள்ளார்.
தற்போது புலனாய்வுப் பிரிவில் வாக்கு மூலம் அளித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை நேற்று மாலை பொலிஸார் மாலம்பே பிரதேசத்தில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விமலின் கோரிக்கையை நிறைவேற்றிய புலனாய்வுப் பிரிவினர்
நுகேகொடையில் சமீபத்தில் மகிந்தவுடன் நாட்டை வெற்றிகொள்வோம் என்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தனது மனைவி தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச முறைகேடான நிலையில் பெற்றுக்கொண்ட இராஜதந்திரக் கடவுச்சீட்டை தன் வசம் வைத்திருந்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விசாரணைகள் பற்றி கூட்டத்தில் விமல் வீரவன்ஸ கருத்து வெளியிட்டு இருந்தார்.
எனது மனைவியை இன்று கைது செய்வார்கள் நாளை கைது செயவார்கள் என்று கூறிக்கொண்டு இருக்கின்றார்கள், ஆனால் கைது செய்ய எவரும் வருவதில்லை, வாக்குமூலமும் பெறுவதில்லை. வாக்குமூலம் பெறும் வரை நாங்கள் காத்துக்கொண்டிருக்கின்றோம்.
இதை எல்லாம் கூறி எங்கள் பயணத்தை நிறுத்த முடியாது என விமல் வீரவன்ச கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் அவ்வாறு தெரிவித்த போதிலும் விமல் வீரவன்ஸவின் மனைவி நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நுகேகொடை பேரணிக்கும் ஷசி வீரவன்சவின் கைதுக்கும் தொடர்பில்லை: அஜித் ரோஹன
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி கைது செய்யப்பட்டமைக்கும் சமீபத்தில் நுகேகொடையில் இடம் பெற்ற பேரணிக்கும் இடையில் சம்பந்தம் உள்ளதாக பேசப்படும் கதைகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு எதிராக கிடைக்கப்பபெற்ற முறைபாடு தொடர்பாக விசாரணைகள் கடந்த சில வராங்களுக்கு முன்னரே ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள ஷசி வீரவன்சவை சட்ட வைத்திய அதிகாரிகள் மூலம் விசாரணைகள் மெற்கொள்ளப்படுவதோடு இன்றைய தினம் நீதி மன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது இராஜதந்திர கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வீரவன்ஸவுக்கு இரண்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்: கடுவலை மேயர்
போலி ஆவணங்களை தயாரிக்க உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு இரு தண்டனைகளை வழங்க முடியும் என கடுவலை மாநகர மேயர் ஜீ.எச்.புத்ததாச தெரிவித்துள்ளார்.
ராஜதந்திர கடவுச்சீட்டை போலி ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் வீரவன்ஸவின் மனைவி சசி வீரவன்ஸ நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
ராஜதந்திர கடவுச்சீட்டை போலியாக செய்து கொண்டமை காரணமாக கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ஸவின் மனைவிக்கு வழங்கும் தண்டனை போல், அதற்கு உதவியமை, உடந்தையாக இருந்தமை சம்பந்தமாக வீரவன்ஸவுக்கு இரண்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் புத்ததாச கூறியுள்ளார்.
விமல் வீரவன்ஸவுக்கு ஒரு சட்டமும் சாதாரண நபர்களுக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது என்றும் புத்ததாச சுட்டிக்காட்டியுள்ளார்.
வீரவன்ஸவின் மனைவிக்கு சுகவீனம்: குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவி ஷசி வீரவன்ஸ சுகவீனமுற்றிருப்பதால், அவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த முடியவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வீரவன்ஸவின் மனைவி மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் இருந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் அறிவித்தனர்.
வீரவன்ஸவின் மனைவி சுகவீனமுற்றிருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் நிலைமையில் அவர் இருக்கின்றாரா என்பதை கண்டறிய சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு அனுமதி வழங்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஷசி வீரவன்ஸ கைது செய்யப்பட்டு 24 மணிநேரம் கடந்துள்ளதால், புலனாய்வுப் பிரிவினர் சட்ட வைத்திய அதிகாரியை கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum